அனிதா மரணத்தில் சந்தேகம்: ஆதிதிராவிட ஆணைய அதிகாரி! அனிதாவின் மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று ஆதி திராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். மருத்துவராகும் கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அனிதா மரணத்தில் சந்தேகம்: ஆதிதிராவிட ஆணைய அதிகாரி! அனிதாவின் மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று ஆதி திராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். மருத்துவராகும் கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொ


அனிதாவின் மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று ஆதி திராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

மருத்துவராகும் கனவு கலைந்ததால் அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டங்கள் நடைபெற்றன. அனிதாவின் தற்கொலை தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் உத்தரவுப்படி செப்.16 முதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

இன்று (செப் 27) செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “மருத்துவ இடம் கிடைக்காத பட்சத்தில் பிவிஎஸ்சி என்ற கால்நடை படிப்பில் சேர்ந்திருக்கிறார். இதுதவிர விவசாயம், ஏரோநாட்டிகல் உள்ளிட்ட படிப்பில் சேரவும் விண்ணப்பித்துள்ளார். அதற்கான அழைப்பாணையும் வந்துள்ளது. இவ்வாறு மற்ற படிப்புகளில் சேர அனிதா தயாராக இருந்த நிலையிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது, வெளிப்புற அழுத்தமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்

“கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 18% இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேவை என்று கருதுகிறேன். சில வடமாநிலங்களில் எட்டாம் வகுப்பு முதலே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோல தமிழகத்திலும் நடைபெற வேண்டும். தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் நுழைவுத் தேர்வுகளைப் பற்றித் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எந்த புரிதலுமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது” என்றும் முருகன் கூறினார்.

அனிதா மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்றும், அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கேட்கவுள்ளோம் என்றும் முருகன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here