வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு இந்தியா 40 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலக பொருளாதார மன்றம், 2016 – 17 ஆம் ஆண்டிற்கான, வளரும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 137 நாடுகளில் நடத்தப்பட்டது. உள்கட்டமைப்பு, கல்வி, தொழிலாளர் திறன், பொருளாதாரச் சந்தை வளர்ச்சி உள்ளிட்ட 12 அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ், மற்றும் சிங்கப்பூர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. இதில்,கடந்த ஆண்டு 39 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்தாண்டு 40 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
உள்கட்டமைப்பில் 66-வது இடமும், உயர்கல்வியில் 75-வது இடமும், தொழில்நுட்ப தயார் நிலையில் 107-வது இடமும் இந்தியா பெற்றுள்ளது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. புதுமையான தொழில்நுட்பங்களை கையாளுவதில் 29-வது இடத்தில் இந்தியா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக