அண்மையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் பற்றி இந்திய ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் பெருமளவிலான சர்ச்சைகளை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை பற்றி தனது உரையில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்த போதிலும், அத்துடன் சேர்த்து நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசையும் தாக்கிப் பேசியிருக்கிறார். சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்களை அவர் மட்டுமல்ல அவருடைய சகாக்களும் வெளிநாட்டு பயணம் பற்றிய புகைப்படங்களையும் தகவல்களையும் பதிவிடுகின்றனர். ஆனால், ராகுல்காந்தியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சையை அதிகமாக்கியிருக்கிறது ஒரு புகைப்படம். இந்தப் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது ராகுல்காந்தியோ அல்லது அவரது சகாக்களோ அல்ல. செப்டம்பர் 14ஆம் தேதியன்று இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இந்த புகைப்படத்தை பதிவேற்றியிருப்பது ஒரு பெண். ராகுல்காந்தியுடன் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் நதாலியா ராமோஸ், தானே இந்த புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார்.
புகைப்படத்தை பதிவேற்றியிருக்கும் நதாலியா 'வெளிப்படையான, அறிவார்ந்த ராகுலுடன் நேற்று இரவு' என்று அதில் எழுதியிருக்கிறார். யார் இந்த நதாலியா ராமோஸ்? இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படத்துடன் இப்படி எழுதியிருக்கிறார் நதாலியா, ''வெளிப்படையான, அறிவார்ந்த ராகுலுடன் நேற்று இரவு இருந்தேன். உலகின் வேறுபட்ட பகுதிகளிலிருந்து வந்திருக்கும் பல்வேறு கோணங்களை கொண்ட சிறந்த மனிதர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
" நதாலியா மேலும் எழுதுகிறார், ''வெளிப்படையான மனதை கொண்ட அறிவார்ந்தவர்களுடன் இணைந்து இந்த உலகை நாம் மேலும் மேம்படுத்தலாம். எனது அறிவை திறந்துவிட்டதற்கு நன்றி” சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவுகிறது. ராகுல்காந்தியுடன் இருக்கும் பெண் யார் என்பதை தெரிந்துக் கொள்ளும் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
நதாலியா எங்கு வசிப்பவர்? நதாலியாவின் முழுப்பெயர் நதாலியா ராமோஸ் கோஹேன். ஸ்பானிஷ்-ஆஸ்திரேலிய நடிகையான அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 2007 ஆம் ஆண்டில் 'ப்ரட்ஸ்' (Bratz) திரைப்படத்தில் யாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும், 2013 ஆம் ஆண்டு 'த டாம்ட்' (The Damned) திரைப்படத்தில் ஜில் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும் நினைவுகூரப்படும் நதாலியா 1992 இல் ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் பிறந்தவர்.
நதாலியாவின் தாய் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் நதாலியாவின் தாய் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர், தந்தை ஸ்பெயினை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகர் ஜுவான் கார்லஸ் ராமோஸ் வகேரோ. இரண்டு வயதாக இருக்கும்போது ஆஸ்திரேலியா சென்ற நதாலியா, பிறகு மியாமி சென்று அங்கேயே வளர்ந்தார். 2016ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார் நதாலியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக