மியான்மர் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ? நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தாக்குதல்! மியான்மர் எல்லையில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நா - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மியான்மர் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ? நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தாக்குதல்! மியான்மர் எல்லையில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நா


நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தாக்குதல்!

மியான்மர் எல்லையில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவர்கள் நாகாலாந்து தேசியவாத சோசியலிஸ்ட் குழு(என்.எஸ்.சி.என்). இந்தியாவின் சில பகுதி மற்றும் மியான்மரின் சில பகுதியை உள்ளடக்கி நாகாலிம் என்ற பகுதியை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான நோக்கம். இந்தக் குழுவின் இந்தியா தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று செப்.27 அதிகாலை, இந்திய ராணுவத்தினர் மியான்மர் எல்லை அருகே என்.எஸ்.சி.என் கிளர்ச்சியாளர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ தரப்பில் உயிர்ச் சேதம் இல்லை என்றும், என்.எஸ்.சி.என் தரப்பில் பலர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்ரைக் என்றே முதலில் தகவல் வெளியானது.

ஆனால் இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம், எல்லையை தாங்கள் தாண்டவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்திய- மியான்மர் எல்லையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் முதலில் தாக்குதல் நடத்தியதையடுத்து ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் எல்லையில் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here