‘கெயில் கியாஸ் திட்டத்தில் திமுக - காங்கிரஸை நம்பி விவசாயிகள் போராட்டத்தில் இறங்க வேண்டாம்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கெயில் கியாஸ் திட்டத்தை அவசரமாக நிறைவேற்றக்கோரி பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானதை தொடர்ந்து இதற்கு தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின், “ஏழு மாவட்ட விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் கோவையில் நேற்று (அக்டோபர் 8) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல. நியாயமான கருத்துகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கெயில் கியாஸ் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசின்போதுதான் கெயில் கியாஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது.
எனவே, திமுக - காங்கிரஸை நம்பி விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டாம். தொழில்திட்டங்கள் தமிழகத்துக்கு வருவதை சிலர் எதிர்கின்றனர். ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் கோயிலில் அர்ச்சகர் ஆவதை இந்து மதம் தடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக