எந்த ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது? யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்’ என, திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எந்த ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது? யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்’ என, திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழ


‘யாருடைய ஆட்சியில் குதிரை பேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்’ என, திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 21ஆவது விழாவாக நேற்று (அக்டோபர் 26) திருச்சியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார். எப்போது பார்த்தாலும், நம்முடைய ஆட்சியை குறை சொல்வதுதான் வழக்கம். அவர் எப்போது பார்த்தாலும் ஒரு வசனத்தை பேசுவார், ‘இது குதிரை பேர அரசு’ என்று சொல்வார். யாரை சொல்வார் என்று நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், விரைவிலே தீர்ப்பு வருவது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்போது யாருடைய ஆட்சியிலே குதிரை பேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

மேலும் டெங்குக் காய்ச்சல் குறித்து பேசிய அவர், “மழைக்காலங்களிலே சீதோஷ்ண நிலை மாறுகிறது. அப்படி சீதோஷ்ண நிலை மாறும்போது பல்வேறு காய்ச்சல் பொதுமக்களுக்கு வருவது இயல்பு. பல ஆண்டுகளாக இப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது. மக்களும் அதற்கு தகுந்த சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுபோலதான் தற்போது டெங்குக் காய்ச்சல் வந்துள்ளது.

ஆனால், இதை வைத்துக்கொண்டு ஸ்டாலின் இந்த ஆட்சிக்கு டெங்கு ஆட்சி என்று பெயர் சூட்டியுள்ளார். ஆகவே, அவருக்கு அவ்வளவுதான் புத்திசாலித்தனம் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால், காய்ச்சல் வருவது இயற்கை, அதைக் குணப்படுத்துவதற்கு என்ன ஆலோசனை என்று சொன்னால், அது உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டுக்குரியதாக அமையும்.

அரசைப் பொறுத்தவரை விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைகின்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். டெங்கு கொசு கடித்துதான் டெங்குக் காய்ச்சல் வருகிறது. டெங்கு கொசு நல்ல தண்ணீரில்தான் உருவாகிறது, பகலிலே கடிக்கிறது. காய்ச்சல் வந்தவுடன் நாம் அரசு மருத்துவமனைக்கோ, தனியார் மருத்துவமனைக்கோ சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து, உடனடியாக அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகி விடும். எனவே, மக்களுக்கு டெங்குக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here