2017 விருதுகள்: படைப்புகளை வரவேற்கும் தமுஎகச! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2017 விருதுகள்: படைப்புகளை வரவேற்கும் தமுஎகச!


2017ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குப் புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் வரவேற்கும்விதமாக தமுஎகச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. அந்தவகையில் 2017ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள் / குறுந்தகடுகள் வரவேற்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துறை சார்ந்த விருதுகள் குறித்தான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விருதுகள் விவரம்

1. தோழர் கே.முத்தையா நினைவு விருது – தொன்மைசார் நூல்

2. கே.பாலசந்தர் நினைவு விருது – நாவல்

3. சு.சமுத்திரம் நினைவு விருது – விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு

4. இரா.நாகசுந்தரம் நினைவு விருது – கலை இலக்கிய விமர்சன நூல்

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் - செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது – கவிதைத் தொகுப்பு

6. அகிலா சேதுராமன் நினைவு விருது – சிறுகதைத் தொகுப்பு

7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது - மொழிபெயர்ப்பு

8. பா.இராமச்சந்திரன் நினைவு விருது - குறும்படத்துக்கு

8. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது – ஆவணப்படத்துக்கு

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்

9. குழந்தைகள் இலக்கிய நூல்

10. மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்

நிபந்தனைகள்

2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் / குறுந்தகடுகள் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். போட்டிக்கு வந்த நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் / குறுந்தகடுக்கும், ‘தமுஎகச விருதும்’ சான்றிதழும் ரூ.5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தமுஎகச சார்பில் நடத்தப்படும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும். 2018 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கு தமுஎகச முகநூல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here