ஆசியா மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவும், சீனாவும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தவ் ஜாங் இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திற்கு இன்று( மார்ச் 11) அளித்துள்ள பேட்டியில் "கடந்த பல ஆண்டுகளாகவே ஆசியா மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவும், சீனாவும் பெரும்பங்காற்றியுள்ளன. 2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட பாதியளவைக் கொண்டுள்ளன.
இந்த இரு நாடுகளும், மேக்ரோ பொருளாதார செயல்பாடுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான தடைகளை நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளன. நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்த இரு நாடுகளும் சென்றுகொண்டுள்ளன. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு வலுவான பொருளாதாரப் பங்காண்மை இருப்பது நன்மை பயக்கும், இரு நாடுகளின் ஒத்துழைப்பும் வரவேற்கத்தக்கது. பிரிக்ஸ் மற்றும் ஜி20 நாடுகளில் இரு நாடுகளும் இருப்பது ஒரு சிறந்த உதாரணமாகும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக