குடும்பத்தில் பிரிவினை வருவதற்கு முக்கியக் காரணம் செல்போன்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குடும்பத்தில் பிரிவினை வருவதற்கு முக்கியக் காரணம் செல்போன்!


கோவை அன்னூரிலுள்ள செல்போன் டவரை அகற்றப் பேரூராட்சி உத்தரவிட்டதை எதிர்த்து இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் குடும்பத்தினர்கள் இடையே பிரிவு ஏற்பட செல்போன் முக்கியக் காரணமாக இருக்கிறது என நீதிபதிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

கோவை அன்னூரிலுள்ள இண்டஸ் டவர்ஸ் நிறுவன செல்போன் டவரை அகற்றும்படி பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று (மார்ச் 10) நடைபெற்றது. செல்போன்கள் டவர் அமைக்க போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

இதையடுத்து, செல்போன் கதிர் வீச்சு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதோ இல்லையோ... செல்போன்கள் குடும்பத்தினரிடையே பிரிவை ஏற்படுத்துகிறது. கர்ணனின் கவச குண்டலம் போல் மக்களின் உடல் அங்கமாக செல்போன்கள் மாறவிட்டது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு குற்றச்செயல்களுக்கு செல்போன்கள்தான் முக்கியக் காரணமாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here