முன்னணி நகரங்களில் சொத்து விலை சரிவு! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொத்துக்களின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொழில் நகரங்களான தூத்துக்குடி,மதுரை, சிவகாசி, காரைக்குடி,திருச்சி போன்றவை முதலீட்டு தொகை மைனஸில் செல்கின்றன. ரியல் எஸ்டேட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முன்னணி நகரங்களில் சொத்து விலை சரிவு! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொத்துக்களின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொழில் நகரங்களான தூத்துக்குடி,மதுரை, சிவகாசி, காரைக்குடி,திருச்சி போன்றவை முதலீட்டு தொகை மைனஸில் செல்கின்றன. ரியல் எஸ்டேட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன.


ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் நாட்டின் முன்னணி 9 நகரங்களில் சொத்து விலை 7 சதவிகிதம் சரிந்துள்ளது.

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்வான செய்தியென்றால் அது சொத்து விலை குறைந்திருக்கிறது என்பதுதான். அப்படியொரு செய்தியைத்தான் ’பிராப் ஈக்விட்டி’ நிறுவனம் தனது ஆய்வறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது. குருகிராமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப் ஈக்விட்டி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் நாட்டின் முன்னணி நகரங்களான குருகிராம், நொய்டா, மும்பை, புனே, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் தானேவில் சொத்து மதிப்பு தோராயமாக சதுர அடி ஒன்றுக்கு 6,762 ரூபாயிலிருந்து 6,260 ரூபாயாகக் குறைந்துள்ளது. இது 7 சதவிகிதம் சரிவாகும். வீடு வாங்குவோர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே விலைச் சரிவுக்குக் காரணமாகும்.

மேற்கண்ட 9 நகரங்களில் விற்பனையாகாத குடியிருப்புகளின் எண்ணிக்கை 5,95,000 ஆக உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்நகரங்களில் 40,694 குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளன. இதற்கு முந்தைய காலாண்டில் 37,555 குடியிருப்புகள் விற்பனையாகியிருந்தன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஜனவரி முதல் மார்ச் வரையில் 8 சதவிகித வளர்ச்சி காணப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொத்துக்களின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொழில் நகரங்களான தூத்துக்குடி,மதுரை, சிவகாசி, காரைக்குடி,திருச்சி போன்றவை முதலீட்டு தொகை மைனஸில் செல்கின்றன. ரியல் எஸ்டேட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன.

மேலும், நாடு முழுவதும் 15 மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ரெரா) இணையதளம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் வீடு வாங்க நினைப்பவர்களுக்குத் தகவல் கிடைக்கும் விதமாக ரெரா இணையதளம் உருவாக்கப்பட வேண்டியது 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்ற போதிலும், தலைநகர் டெல்லி, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலங்கானா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் இணையதளம் உருவாக்கப்படவில்லை என்று லைவ் மிண்ட் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here