ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு!

ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு!

தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆளுநர் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் தமிழகம் கடந்த ஒரு மாதமாக போராட்டக் களமாகவே மாறியுள்ளது

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியும், அதன்பிறகு நினைவூட்டல் கடிதம் எழுதியும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இன்று (ஏப்ரல் 30) மாலை 5மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார். இதில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப் பிரதமரிடம் வலியுறுத்துமாறு ஆளுநரிடம் முதல்வர் கேட்டுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே 3ஆம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here