தென்மாவட்டங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு மறுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தென்மாவட்டங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு மறுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்



இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது|, “தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (PSO) எனக்குப் பாதுகாப்பு அளிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பிறகு தொகுதிக்குச் செல்லும் போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் எனக்குப் பாதுகாப்பு அளித்தனர். இதனை அச்சமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த . மணிவண்ணன் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தார்.

அவர் மாறுதலுக்குப் பிறகு அமைச்சர் மணிகண்டன் சிபாரிசில் வந்த ஓம் பிரகாஷ் மீனா, எனக்குப் பாதுகாப்பு அளிக்க மறுத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன், உளவுத்துறை ஆய்வாளர் மாரியப்பன், தனிப்பிரிவு ஆய்வாளர் ஜான் பிரிட்டோ (SP INSPECTOR) ஆகியோரிடம் பல முறை வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக முறையிட்டுள்ளோம்.

ஆனாலும் இவர் பதவியேற்ற பிறகு கடந்த ஓராண்டாக (தேவர் ஜெயந்தி உட்பட) நான் மாவட்டத்தில் வருகை தந்தபோது ஒரே ஒரு முறையும், என்னிடம் கடிதம் வாங்கிக் கொண்டு ஒரே ஒரு முறையும், கடைசியாக 23.4.2018 அன்று எனது தொகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கொரிய நாட்டு அறிஞர்களை அழைத்து வந்ததால், வெளிநாட்டவர் வரும் சூழலில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறக் கூடாது என்பதால் பாதுகாப்பிற்காக ஒரு போலீஸ் வாகனத்தில் ஐந்து பேரை அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்பாக தொகுதிக்கு நான் வந்தபோது, பாதுகாப்பு கேட்டு ஆய்வாளர் (தனிப்பிரிவு) ஜான்பிரிட்டோவிடம் பேசியபோது, “வந்தால் வரட்டும்” என மிகச் சாதாரணமாக பதில் பேசினார். எஸ்.பி. எனக்கு PSO கொடுத்துள்ளதாகப் பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்துள்ளார், ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து, ஜெயலலிதா இருக்கும்போது கொடுத்த PSOவை எஸ்.பி., கொடுத்தது போல் குறிப்பிட்டுள்ளார்.என்னால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக் கூடாது என்பதால் நான் போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here