*_🌴🐯🇮🇳🕊🌴அதிகத்தூர் அரசு பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித்தரப்படும்: கமல் வாக்குறுதி_*
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் அரசு பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கமல் வாக்குறுதி அளித்துள்ளார். பள்ளியில் கழிப்பறை கட்டவும் வேலை நடைபெறுகிறது என்று கிராமசபை கூட்டத்தில் கமல் பேசினார். திறமையை வளர்த்துக் கொள்ள அதிகத்தூர் கிராம மக்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்றும் நீர் தேங்க வசதியாக குளம், குட்டைகள் சீரமைக்கப்படும், ஏரி புனரமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நரிக் குறவர், இருளர் வாழ்க்கைத்தரம் மேம்பட மய்யம் பாடுபடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நரிக் குறவ பெண்கள் கமல்ஹாசனுக்கு பாசிமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
*_🌴🐯🇮🇳🕊🌴லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறி பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ-வை மிரட்டியவர் கைது_*
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறி பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ, இ.கருணாநிதியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இ.கருணாநிதி புகாரை ஏற்று வரதராஜன் என்பவரை குரோம்பேட்டை போலீஸ் கைது செய்துள்ளது.
*_🌴🐯🇮🇳🕊🌴பெங்களூரு அருகே காரில் இருந்து ரூ.85 லட்சம் பணம் பறிமுதல்_*
பெங்களூரு: பெங்களூரு அருகே நிலமங்கலா என்ற இடத்தில் காரில் இருந்து ரூ.85 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகத் தேர்தலுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
*_🌴🐯🇮🇳🕊🌴டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு_*
சென்னை: டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
*_🌴🐯🇮🇳🕊🌴கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது : தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு_*
சாம்ராஜ்: கர்நாடகத்தில் பாஜக ஆதரவு அலை வீசுவதாக நரேந்திர மோடி பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 5 நாட்களில் 15 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி பேச இருக்கிறார். மே 12-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
*_🌴🐯🇮🇳🕊🌴தெற்கு ரயில்வே துறை நடத்தும் 8 பள்ளிகளை மூட திட்டம்_*
சென்னை: தெற்கு ரயில்வே துறை நடத்தும் 8 பள்ளிகளை அடுத்த ஆண்டு மூட நடவடிக்கை எடுத்து வருகிறது. அரக்கோணம், பெரம்பூர், மதுரை, ஈரோடு, ஜோலார்பேட்டையில் பள்ளிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. போதனூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களிலும் ரயில்வே பள்ளிகள் மூடப்பட உள்ளன. மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற பெற்றோருக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த கல்வியாண்டில் ரயில்வே பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.
*_🌴🐯🇮🇳🕊🌴ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக புகார்_*
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெகுவாக காற்று மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.
*_🌴🐯🇮🇳🕊🌴11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓ.பி.எஸ் தரப்பு கேவியட் மனுத்தாக்கல்_*
டெல்லி: 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓ.பி.எஸ் தரப்பு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
*_🌴🐯🇮🇳🕊🌴குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு_*
சென்னை: குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கும் ஆலையை திமுகவினர் கண்டுபிடித்தனர். முறைக்கேட்டை கண்டுபிடித்த திமுகவினர் மீதே வழக்கு போட்டு போலீசார் கைது செய்தனர். திமுகவினர் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணையை சீர்குலைத்து ஆதாரங்களை அழிக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
*_🌴🐯🇮🇳🕊🌴இரட்டை இலை சின்னம் வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை_*
டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
*_🌴🐯🇮🇳🕊🌴மே 4-ம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்_*
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 4ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். அன்றைய தினம் வேலூர் சிஎம்சியின் நூற்றாண்டு நிழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 5ல், சென்னை பல்கலை மற்றும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
*_🌴🐯🇮🇳🕊🌴நாக்பூரில் 114 டிகிரி வெயில்_*
நாக்பூர்: மராட்டிய மாநிலம் நாக்பூரில் 114 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாக்பூரில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக