- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ப்ரியங்கா வதந்தி!

தனக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. வதந்திகள் ப்ரியங்காவுக்குப் புதிதில்லை என்றாலும், திருமணமாகிவிட்ட வதந்தி அவருக்குக் கொஞ்சம் புதிதுதான்.

பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்துவரும் ப்ரியங்கா சோப்ரா இந்தியா வந்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்ற அவர், தனி விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் அவர் கையில் தாலி இருந்ததால் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது எனச் சர்ச்சைகள் உருவானது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் திருமணம் குறித்த உண்மையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ப்ரியங்கா.

அதில் தான் கையில் கட்டியிருந்தது திருஷ்டிக்காக அணியப்படும் பாசி கயிறு என்று கூறியிருக்கிறார். தனது கையில் தாலி இல்லை என்றும் தனக்குத் திருமணம் நடந்தால் அது ரகசியமாக நடக்காது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மூன்றாண்டுகள் கழித்து பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சல்மான் மற்றும் அலி அப்பாஸ் ஜாபருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவதை மிகவும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

🌴கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி_*

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. விதிகளுக்கு மாறாக பந்து வீசுவதாக புகார் எழுந்ததையடுத்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஹபீஸ்க்கு பந்துவீச தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. 
🌴திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாததால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டுத் தற்கொலை_*

சென்னை: சென்னை மேற்கு தாம்பரம் திருக்குமரன் தெருவில் 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு கணவர் நரேந்திரன் என்பவர் அழைத்துச் செல்லாததால் மனமுடைந்து கர்ப்பிணி அனிதா என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

🌴மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்_*

சென்னை: படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, குடிகாரனா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரிடம் விசாரணை_*

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் அதிகாரி சந்தானம் விசாரணை மேற்கொண்டார். பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் 3ம் கட்டமாக சந்தானம் கமிஷன் விசாரித்து வருகிறது.

தமிழகத்தில் ரூ.2467 கோடியில் கூடுதலாக ஒரு விமான நிலையம்: மத்திய அமைச்சகம் ஒப்புதல்_*

டெல்லி: தமிழகத்தில் ரூ.2467 கோடியில் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக பாரம்பரியங்களை விளக்கும் ஓவியங்கள் விமான முனையத்தில் இடம்பேறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் விவசாயி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை: கடன் தொல்லையால் நேர்ந்த கொடூரம்!_*

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் விவசாயி, மனைவி, மகனுடன் தற்கொலை செய்துகொண்டது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்மம்பட்டி அருகேயுள்ள புலிக்கரடியை சேர்ந்த விவசாயி அர்ஜுனன்(55), குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனில் சிக்கிக்கொண்ட அவர், மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை கொடுத்துள்ளார். 

இதில் அர்ஜுனனின் 10 வயத மகன் மோகன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த அர்ஜுனன், மனைவி வெண்ணிலா(35), 13 வயது மகன் பிரகாஷ் ஆகியோரது சடலங்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. உயிர்பிழைத்த சிறுவன அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 பேரின் இறப்புக்கு கடன் தொல்லை தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மணல் கடத்தலை தடுக்க நாகநதி ஆற்றில் பள்ளம் : வருவாய்த்துறையினர் அதிரடி_*

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாலாற்று படுகையில் இரவு பகலாக மணல் கடத்தப்படுகிறது. வேலூர் தாலுகா பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க தாசில்தார் பாலாஜி தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சமீபகாலமாக கணியம்பாடி பகுதிகளில் மணல் கொள்ளை அதிகரித்து வந்தது. இதையடுத்து நாகநதி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க தாசில்தார் பாலாஜி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் சிங்கிரிகோயில், கீழ்அரசம்பட்டு கிராமப்பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களுக்கு செல்லும் பாதைகளில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் சுமார் 7 அடி வரையில் பள்ளங்கள் தோண்டி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். 

அதேபகுதியில் நாகநதி ஆற்றில் இருந்து கடத்தப்பட்டு தனியார் நிலங்களில் பதுக்கி வைத்திருந்த 10 யூனிட் மணலையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கள்ளிபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு_*

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கள்ளிபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கள்ளிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஒகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு ஒரு நாள், அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இதனால் இப்பகுதி மக்கள், 500 மீட்டர் தொலைவில் உள்ள, அரசு மருத்துவமனை அருகே செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்டு வெளியேறும் தண்ணீரை குடங்களில் சேகரித்து பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பென்னாகரம் பிடிஓ அதிகாரிகளிடம் மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை வெண்ணாற்றுப்படுகையில் தயாரிக்கப்படும் செங்கற்கள் : கரை உடையும் அபாயம்_*

ஞ்சை: தஞ்சை வெண்ணாற்று படுகையில் உள்ள மண்ணில் செங்கற்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் போது கரையை உடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள்து. கோடை காலத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டமான நாகத்தி, குலமங்கலம், பள்ளியக்கிரஹாரம், திருக்கரூகாவூர், மெலட்டூர், திட்டை, அன்னப்பன்பேட்டை, பாபநாதம், ராஜகிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.செங்கல் தயாரிப்பவர்கள் மண் கிடைக்காததாலும், அரசு பல விதிமுறைகளை விதித்துள்ளதால், ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணால் செங்கல் தயாரிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் மண் எடுக்க வேண்டுமானால், விண்ணப்பம் படிவம் கொடுத்து , முறையாக பணம் செலுத்தி செங்கல் தயாரிப்பதற்கான ஆணையை பெற வேண்டும் என உத்தரவுள்ளது.ஆனால் அனுமதியுடன் எடுக்கும் மண்ணால், போதிய அளவில் செங்கல் தயாரிக்க முடியாததாலும், மண்ணும் போதிய அளவில் கிடைக்காததாலும் , ஆற்றுப்படுகையில் செங்கல் தயாரிக்கின்றனர். ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுப்பதால் ,கரைகள் பலமில்லாமல் போய்விடும். இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கரையை உடைத்து கொண்டு ஊருக்குள்ளும், சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள்ளும் சென்று விடும். இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

படுகையில் செங்கல் தயாரிப்பதால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது வேதனையையளிக்கிறது. இது போன்ற வருங்காலத்தில் ஏற்படும் ஆபத்தை உணராமல் வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் கரைகளிலும் படுகை மண்ணால் செங்கல் தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கிராம புற நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறுகையில்,ஆற்றுப்படுகையில் உள்ள மண்ணை எடுத்து செங்கல் தயாரிக்கப்பட்டால், வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் படுகை பகுதி பாதிக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் ஆற்றுப்படுகையில் செங்கல் தயாரிக்கும் பணியை நடைபெறுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செம்பனார்கோவில் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : மக்கள் அவதி_*

செம்பனார்கோவில்: செம்பனார்கோவில் வட்டாரத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் அத்யாவசிய தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் கடந்தாண்டு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்தது. இதனால் தலச்சங்காடு, ஆக்கூர், மேமாத்ததூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 700 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஆனால் தற்போது கோடைகாலத்தில் செம்பனார்கோவில் பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த காலங்களில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்டவைகள் தூர்வாரமால் இருந்ததால் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. மேலும் மழைநீரை சேமிக்க முடியாமல் பெருமளவு கடலில் தான் கலந்தது. 

மேலும் குளங்களை தூர்வார பொதுமக்களுக்கு அந்தந்த ஒன்றியத்தின் மூலம் உரிமம் கொடுத்து தூர்வாரப்பட்டன. ஆனால் பல பேர் விதிகளை மீறி குளங்களில் மண் எடுத்து விற்பனையும் செய்து வந்தனர். இதனால் குளங்களில் தண்ணீர் இருந்தும் தேங்கவில்லை. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எப்போதும் 16 அடியில் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 45 அடி போனாலும் தண்ணீர் வருவதில்லை. மேலும் பல பேர் உயரழுத்த மோட்டார் அமைத்து 300 அடிக்கு மேல் தண்ணீர் எடுப்பதால் இப்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி நீர் தொட்டிகளிலும், குழாய்களின் மூலமாக தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here