சென்னை: கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தினார். இதில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்புள்ளது. எங்கள் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுதான் முன்னேறும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை தயார் செய்ய இருக்கிறோம்.
கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து இப்போது யோசிக்கவில்லை. கட்சி தொடங்கும் போது கமலுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். கட்சியே இன்னும் தொடங்கவில்லை கூட்டணி வைப்பது குறித்து பின்பு பேசலாம்.
கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எடியூரப்பாவிற்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது மிகவும் தவறானது. உச்ச நீதிமன்றம் அதை மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன்.
மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல் துறை தடை விதிக்காது. ஈழம் குறித்த நினைவேந்தலுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால்ஏதாவது காரணம் இருக்கும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். மஜத- காங்கிரஸ் தலைமையிலான புதிய கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி தீர்ப்பை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ரஜினி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக