வேளாண் ஏற்றுமதி ஏப்ரலில் உயர்வு! வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அரிசி ஏற்றுமதி 12 சதவிகிதம் உயர்ந்து, 9.89 லட்சம் டன்னுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாஸ்மதி அ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வேளாண் ஏற்றுமதி ஏப்ரலில் உயர்வு! வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அரிசி ஏற்றுமதி 12 சதவிகிதம் உயர்ந்து, 9.89 லட்சம் டன்னுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாஸ்மதி அ


இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 11 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அரிசி ஏற்றுமதி 12 சதவிகிதம் உயர்ந்து, 9.89 லட்சம் டன்னுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 3,70,183 டன்னாகவும், இதர அரிசி வகைகள் ஏற்றுமதி 6,19,665 டன்னாகவும் உள்ளது. 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி அளவு முறையே 3,89,542 டன் மற்றும் 4,93,441 டன்னாக இருந்தது. எருமை இறைச்சி ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2017 ஏப்ரலில் 85,997 டன்னிலிருந்து 2018 ஏப்ரலில் 95,296 டன்னாக உயர்ந்துள்ளது. இது 11 சதவிகித வளர்ச்சியாகும்.

பால் பொருட்கள் ஏற்றுமதி 8,434 டன்னிலிருந்து 12,987 டன்னாக உயர்ந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் ரூ.150 கோடியாக இருந்த ஏற்றுமதி 2018 ஏப்ரலில் ரூ.224 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம் கோதுமை, கொத்தவரங்காய் உள்ளிட்ட இதர காய்கறிகள் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கொத்தவரங்காய் ஏற்றுமதி 40,405 டன்னாக மட்டுமே உள்ளது. கோதுமை 70 சதவிகித சரிவுடன் வெறும் 11,838 டன் அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here