நீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி! நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ”நீட் தேர்வில் மாநில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி உள்ளது. மொ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி! நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ”நீட் தேர்வில் மாநில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி உள்ளது. மொ

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 1) தள்ளுபடி செய்தது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ”நீட் தேர்வில் மாநில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடி உள்ளது. மொழியாக்கம் செய்வதில் குளறுபடி இருப்பதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். மீண்டும் புதிய நீட் தேர்வு நடத்தி, அதன் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ், தேவைப்பட்டால், இந்த மனு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

ஏற்கனவே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம் முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவி சங்கீதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சங்கல்ப் அமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here