நிபா: கேரளாவில் ஜூன் 12 வரை பள்ளிகள் மூடல்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நிபா: கேரளாவில் ஜூன் 12 வரை பள்ளிகள் மூடல்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்குதலினால் பள்ளிகள், கல்லூரிகள் முதலான கல்வி நிறுவனங்கள் ஜூன் 12ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு 17 பேர் பலியாகியுள்ள நிலையில், இரண்டாவதுகட்டமாக மீண்டும் நிபா வைரஸ் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் திறப்பைத் தள்ளிவைத்துள்ளனர். கோழிக்கோட்டில் ஜூன் 12ஆம் தேதி வரையும்; நிபா வைரஸுக்கு அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி வரையும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா, கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) ராஜீவ் சதானந்தன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பைத் தள்ளிப்போடுவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளித் திறப்பையும் தேர்வுகளையும் தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை (ஜூன் 4) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் சைலஜா கூறினார்.

தற்போது, இரண்டாவதாகப் பரவிவரும் வைரஸினால் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முயற்சி செய்வதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். 1,950 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

சில பகுதிகளில், அதாவது நிபா வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியே திறக்கப்பட்டன. மாணவர்கள் அலங்காரத்துடன் இருந்த வகுப்பறைக்குள் சந்தோஷமாக நுழைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here