ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்)
அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு சார்ந்த பல்வேறு வழக்குகளால் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பரபரப்பான சூழ்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அதாவது 04.06.2018 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தீர்ப்பினை வழங்க இருக்கிறார்கள்.
இவ்வழக்கானது 41 ஆவது வழக்காக இடம் பெற்றுள்ளது.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வானது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடன் எமது இயக்கம் நல்லாசிரியர் திரு. ஆ. வ. அண்ணாமலை அவர்களின் தலைமையில் பத்து ஆண்டுகளாகப் போராடி வருகிறது. அவற்றிற்கெல்லாம் ஒரு நல்ல பலனளிக்கும் வகையில் தீர்ப்பு அமையும் என்ற நம்பிக்கயோடு காத்திருக்கிறோம்.
இவண்,
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக