💢மாணவர்கள் தற்கொலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

💢மாணவர்கள் தற்கொலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*

*🔸மாணவர்கள் தற்கொலை சம்பங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.*

*🔸முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார்.*

*🔸மாணவர்களின் தற்கொலை சம்பவங்களால் அரசியல் ஆதாயம் தேடுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.*

*🔸நீட் தேர்வில் தோல்வி அடைந்த பிரதீபா, சுபஸ்ரீ தற்கொலை குறித்து நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.*

*🔸மாணவிகள் தற்கொலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.*

*🔸இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

*🔸நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவிகள் தற்கொலையை தடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.*

*🔸வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.* 

*🔸மேலும் வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here