அக்னி 5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
அக்னி 5 ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.48 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது.
சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. இந்திய பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
தற்போது இந்தியாவில், அக்னி-1, அக்னி-2, அக்னி-3, அக்னி-4, அக்னி-5 மற்றும் சூப்பர்ஸோனிக் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக