கன்னியாகுமரி: ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து மத ஒருமைப்பாட்டாக ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடினர்.
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ரம்ஜான் சிறப்பு வாய்ந்தவையாகும். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வரும் இந்த பண்டிகையை உலக முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
நம்பிக்கை, தொழுகை, நோன்பு, சக்காத்து, ஹாஜ் ஆகிய ஐந்து கோட்பாடுகள் ரம்ஜான் பண்டிகைக்கு தனிச்சிறப்பு. மேலும், ராமலான் மாதத்தில் பிறை கண்ணில் கண்டதும் ரம்ஜான் நோன்பு தொடங்குவதை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் நாவல்காடு அருகே உள்ள ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில், மத ஒருமைபாட்டு நிகழ்ச்சியாக மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் இனைந்து ரமலான் நோன்பு நிகழ்ச்சியை கொண்டாடினர்.
பின்னர், தொழுகை செய்து அனைவருக்கும் ரமலான் கஞ்சி உணவாக பரிமாறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக