மதுரை: ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் புதன்கிழமையன்று போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஷாஜிராவ் தலைமை தாங்கினார். ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க வேண்டும்.
அறநிலையத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்தது.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி சென்னை ஆணையர் அலுவலகத்திலும், மூன்றாம் கட்டமாக 27-ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று திருக்கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக