வேலூர் சிஎம்சி சமர்ப்பித்துள்ள 84 எம்.பி.பி.எஸ். இடங்கள் யாருக்கு?* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வேலூர் சிஎம்சி சமர்ப்பித்துள்ள 84 எம்.பி.பி.எஸ். இடங்கள் யாருக்கு?*

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) சமர்ப்பித்துள்ள 84 எம்.பி.பி.எஸ். இடங்கள், கலந்தாய்வின்போது அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான (ஓ.சி.) எண்ணிக்கையில் சேர்க்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
சிறுபான்மை அங்கீகாரம் தொடர...: வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு முதல் முறையாக 84 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்துள்ளது.

மீதமுள்ள 16 இடங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப உள்ளது. கிறிஸ்தவ கல்லூரிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் தாங்கள் சமர்ப்பித்த 84 எம்.பி.பி.எஸ். இடங்கள் சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்'' என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் வேலூர் சிஎம்சி நிர்வாகம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் தங்களது சிறுபான்மை அங்கீகாரம் தொடரும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் அது தெரிவித்துள்ளது.
முடிவு எடுக்கவில்லை:

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.

முதல் நாளன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை (ஜூலை 2) முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்போது வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சமர்ப்பித்துள்ள 84 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிறுபான்மைப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுமா எனக் கேட்டபோது, அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

*எம்.பி.பி.எஸ். இடங்கள் சமர்ப்பிப்பு ஏன்?*

மருத்துவக் கல்வியில் உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர்கள் தேர்வை கல்லூரி நிர்வாகமே மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை (நீட்) கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு சி.எம்.சி. எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் மாணவர்களை தாங்களே தேர்வு செய்து கொள்ளவும் அனுமதிக்கக் கோரியிருந்தது.

இதற்கு, மத்திய அரசு அனுமதி மறுத்ததை அடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தொடர்ந்த இரு வழக்குகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அத்துடன், அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.எம்.சி. நிர்வாகம் இந்திய மருத்துவக் கவுன்சில் அளித்த ஒரே ஒரு மாணவர் தவிர மீதமுள்ள 99 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை கடந்த ஆண்டு நிறுத்தி வைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here