தனது உயிரை தியாகம் செய்து வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றிய பள்ளிப் பேருந்து ஓட்டுநர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தனது உயிரை தியாகம் செய்து வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றிய பள்ளிப் பேருந்து ஓட்டுநர்

மும்பையில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் தனது உயிரை தியாகம் செய்து வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்றியுள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள மும்பையில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த பலத்த மழையின்போது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களைக் காப்பாற்றிய பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, பால்கர், புனே உள்ளிட்ட நகரங்களில் கடந்த 10 நாட்களாகக் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் ஜூன் 26 முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால், பிற்பகலில் மீண்டும் தொடங்கிய கனமழை, மாலை வரை நீடித்தது. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மாலையில் பள்ளிகள் விட்டதும் குழந்தைகள் வழக்கம் போல் பள்ளிப் பேருந்துகளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பால்கர் நகர் பகுதியில் உள்ள ரஸ்டோம்ஜீ பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பேருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அந்தப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கியது. பிரகாஷ் பாலு படில் என்பவர் அந்தப் பேருந்தை ஓட்டி வந்தார். குழந்தைகளை அவரவர் வீட்டின் அருகே பத்திரமாக இறக்கிவிட்டுத் திரும்பிய அப்பேருந்து எதிர்பாராத விதமாக அதிகமான தண்ணீர் தேங்கிய சாலையில் சிக்கிக்கொண்டது.

பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அந்த இடத்திலிருந்து வெகு அருகாமையில் இரண்டு மாணவர்களின் வீடு இருந்தது. மாணவர்களைப் பத்திரமாக இறக்கிவிட்டார் டிரைவர் பிரகாஷ். ஆனால், கொஞ்ச தூரம் நடந்து சென்ற அந்த மாணவர்கள் குழி ஒன்றில் சிக்கிக் கொண்டனர். அதைப் பார்த்த டிரைவர் பிரகாஷ், உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த இரண்டு மாணவர்களையும் மீட்டு மேடான பகுதிக்குக் கொண்டு சேர்த்தார்.

ஆனால், வெள்ளத்தில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய பிரகாஷை வெள்ளம் இழுத்துச் சென்றது. வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகே இருந்த கால்வாயில் விழுந்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுபற்றித் தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஆர்னலா, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததுடன், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீண்ட நேரத்திற்குப் பிறகு போராடி அவரது உடலை மீட்டார். தனது பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட ஓட்டுநர் பிரகாஷ் பாலு படிலின் தியாகத்தை, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here