காவல் துறையில், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம் வாயிலாக இயங்கக்கூடிய, போலீசை அழைப்பதற்கான, 'காவலன் டயல் - 100' மற்றும், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அவசர பாதுகாப்புக்கான, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' என்ற, 'மொபைல் ஆப்'கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
பயன் என்ன?
● 'காவலன் டயல் - 100' என்ற, 'மொபைல் ஆப்'பை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவசர காலத்தில், 100 என்ற, எண்ணை டயல் செய்யாமல், 'ஆப்'பை தொட்டால், நேரடியாக, மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை, தங்களுடைய இருப்பிடத் தகவல்களுடன், தொடர்பு கொள்ள இயலும்
● 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' மொபைல் ஆப்பானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக, பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த, 'மொபைல் ஆப்'பை, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள், தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
● அவசர தேவையின் போது, மொபைல் போனை அதிரச் செய்தாலே, அவர்களுடைய இருப்பிட தகவல், மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அத்துடன், மொபைல் ஆப்சில் பதிவு செய்துள்ள, மூன்று உறவினர்கள் அல்லது நண்பர்கள் எண்ணிற்கு, இருப்பிட தகவலுடன், எச்சரிக்கை, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ