அபராதத் தொகையைக் கட்டிய ஊடகங்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அபராதத் தொகையைக் கட்டிய ஊடகங்கள்!


பாலியல் கொலைக்கு உள்ளான கத்துவா சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்ட காரணத்திற்காக இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் ரூபாய் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையைக் கட்டியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சமூக விரோத கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தையோ அல்லது அவரின் பெயரையோ ஊடகங்கள் வெளியிடக் கூடாது அப்படி வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முன்னணி ஊடகங்கள் பல அந்தச் சிறுமியின் புகைப்படத்தையும் அவரின் பெயரையும் வெளியிட்டன. விதிமுறைகளை மீறிய ஊடகங்களின் விவரங்களை அறிவதற்கு நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காகக் கடந்த மே 18ஆம் தேதி மூத்த வழக்கறிஞர் அரவிந்த் நிகம் நியமிக்கப்பட்டார்.

நிகம், விதிமுறைகளை மீறிய ஊடகங்களையும், சில இணையதளங்களையும் அடையாளம் காட்டினார் இந்தப் பட்டியலில் அல்சஜீரா, ஃப்பீடு போன்ற சர்வதேச ஊடகங்களும் இடம்பெற்றன. ஃபேஸ்புக் இந்தியா, யூடியூப் மற்றும் கூகுள் இந்தியாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி கீதா மிட்டல் ஊடகங்களுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக அறிவித்த நிலையில் சில ஊடகங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அபராதத் தொகையின் அளவைக் குறைக்கக் கோரி வாதிட்டனர்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் வழங்கிய தீர்ப்பில், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்தியன் எஸ்பிரஸ், தி இந்து, என்டிடிவி, பைனர், ரிபப்ளிக், டெகான் கிரானிகல், தி வீக், தி ஸ்டோட்ஸ் மேன், இந்தியா டிவி மற்றும் ஃப்ர்ஸ்ட் போஸ்ட் போன்ற ஊடக நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்தார். இதில் ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்ற ஊடகங்கள் அபராதத் தொகையைக் கட்டியுள்ளன.

இந்த நிலையில் பாலியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுமானால், ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட அபராத தொகையைப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குப் பெற்றுத் தருமாறு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டச் சேவைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதுவரை குறிப்பிட்ட தொகையானது சட்டச் சேவை மையத்திடம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here