JEE தேர்வில் முதல் 500 இடத்தில் 14 மாணவிகள் மட்டுமே தேர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

JEE தேர்வில் முதல் 500 இடத்தில் 14 மாணவிகள் மட்டுமே தேர்வு!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதல் 500 இடத்தில் 14 மாணவிகள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதுபோன்று முதல்1,000 இடத்தில் 46 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இந்த விவரம் தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடியில் சேர்வதற்குச் சமீபத்தில் ஜேஇஇ தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதுமுள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில், கணினி அறிவியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறையில் பெண்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பெண்களுக்காக கூடுதலாக 8 சதவிகித இடங்களை அதிகரித்தது. ஆனால் தற்போது கணினி அறிவியல் துறையில் 3 சதவிகித மாணவிகள் மட்டுமே பயின்று வருகிறார்கள்.

ஐஐடி கான்பூர் தகவலின்படி, 24,500 பேர் தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடங்களில் உள்ளனர். இதில் 3000 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் 5,000 இடங்களில் 410 பேர் மட்டுமே பெண்கள். மொத்தமுள்ள 23 ஐஐடிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் 11,279 இடங்களுக்கு 12,000 பெண்கள் தரவரிசை பட்டியலில் உள்ளனர். இதில் 1,202 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜேஇஇ தலைவர், கட்டாய ஒதுக்கீட்டின் கீழும், கூடுதல் ஒதுக்கீட்டின் கீழும் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை உத்திரவாதப்படுத்தும் விதமாக ஒவ்வொரு துறையிலும் 14 சதவிகிதம் இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here