பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருக்கு உதவி: திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை* *மாணவ, மாணவியரின், - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருக்கு உதவி: திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்கள் கோரிக்கை* *மாணவ, மாணவியரின்,

*மாணவ, மாணவியரின், பெற்றோர் இழப்புக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தில், மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவ வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்*

*தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர், மரணமடைந்தால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால், 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. கடந்த, 2017 - 18ல், இத்திட்டத்தில், 1,487 மாணவ, மாணவியர் பயனடைந்தனர்*

*இவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அவர்களின் கல்விக்கு பயன்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது*

*🔵🔵இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது*

*வருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்கும் மாணவர்கள், அதனால், கல்வியை இடையில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டது*

*இதில் விண்ணப்பிப்போருக்கு, 75 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, பொதுத்துறை நிறுவனத்தில், முதலீடாக செலுத்தப்படுகிறது. மூன்றாண்டுகள் கழித்து, அதை, மாணவன் எடுத்துக்கொள்ளலாம்*

*ஆனால், இத்திட்டத்தில், மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்பதை தடுக்க முடிவதில்லை. ஏனெனில், இதன் பயன், மூன்றாண்டுகளுக்கு பின்பே கிடைக்கும்*

*இதற்குள் வருவாய் இல்லாத குடும்ப சூழலால், படிப்பை நிறுத்திவிடுகின்றனர். மூன்றாண்டுகளுக்கு பின், முதிர்வுத்தொகை வரும்போது, அதை வேறு பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்*

*இதற்கு பதில், அந்த நிதியில், மாணவர்கள் கல்வியை தொடர, விடுதிகளில் சேர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு, மாற்று நடவடிக்கையில், பள்ளி நிர்வாகத்தினரே செயல்பட அனுமதிக்கலாம்*

*இல்லாவிட்டால், வழங்கப்படும் நோக்கம் நிறைவேற வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here