🔵🔵உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கடன் உயர்வு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔵🔵உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கடன் உயர்வு*


*🌐உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ. 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்*

*🌐இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு*

*🌐மத்திய அரசின் வட்டியை மானியமாக வழங்கும் திட்டம் 2009-இன்படி உயர்கல்வியில் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 2018-19-ஆம் ஆண்டு முதல், தகுதி அடிப்படையில் ரூ. 7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்க மத்திய உத்தரவிட்டுள்ளது*

*🌐இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் அதிகபட்சமாக ரூ. 7.50 லட்சம் வரை கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறும் கடனுக்கு ஓராண்டுக்கான வட்டி மானியமாக வழங்கப்படும்*

*🌐பயனாளியின் குடும்ப வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்*

*🌐கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர், தேசிய தரச்சான்று நிர்ணயக் குழு, இந்திய மருத்துவக் கழகம், தேசிய செவிலியர் கழகம், இந்திய பார் கவுன்சில் அனுமதி பெற்ற நிறுவனங்கள், மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும்*

*🌐இத்திட்டம் இனிவரும் காலங்களில் புதிதாக கல்விக் கடன் பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும். திட்டத்தின் ஒருங்கிணைப்பு வங்கியாக கனரா வங்கி செயல்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here