🎯விடுமுறை நாளிலும் சிறப்பு வகுப்பு: மனஉளைச்சலால் மாணவர்கள் தவிப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🎯விடுமுறை நாளிலும் சிறப்பு வகுப்பு: மனஉளைச்சலால் மாணவர்கள் தவிப்பு*

*🔴தனியார் பள்ளிகளில், ஞாயிற்றுக் கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்*

*🔴கடந்த கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புடன், பிளஸ்1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அதற்கேற்ப, பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது*

*🔴உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் துவங்கி விட்டன. ஆனால், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கின்றனர்*

*🔴ஆனால், சில தனியார் பள்ளிகளில், ஞாயிற்றுக் கிழமை, அரசு விடுமுறை என, எந்த விடுமுறையும் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்கின்றனர்*

*🔴இதனால், மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்*

*🔴நுாறு சதவீத தேர்ச்சி விகிதத்தை தக்கவைக்க, மாணவர்களுக்கு இடைவிடாமல் இவ்வாறு பள்ளி நடத்துவது பெற்றோரிடமும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதிலும், சிறப்பு வகுப்புகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே நடத்தப்படுகிறது*

*🔴ஆனால், இப்பள்ளிகளில், வழக்கமான நாட்களைப் போலவே,விடுமுறையிலும் பள்ளி செயல்படுவதால், மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகி உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், கல்வித்துறை நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது*

*🔴இவ்வாறு, விடுமுறையே இல்லாமல் உள்ள பள்ளிகளை, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அதற்கு தீர்வு காண வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here