*🔰🔰அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஹைடெக் லேப், ஸ்மார்ட்கிளாஸ் டெண்டருக்கு தடை கோரி மனு: 24ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔰🔰அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஹைடெக் லேப், ஸ்மார்ட்கிளாஸ் டெண்டருக்கு தடை கோரி மனு: 24ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு*



*மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட் டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு*

*தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை (ஹைடெக் லேப்) ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3,090 உயர்நிலைப்பள்ளிகளிலும், 2,939 மேல்நிலைப்பள்ளிகளிலும் செயல்படுத்த முடிவாகியுள்ளது*

*இதேபோல் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை கற்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் வகுப்பறை என்ற அடிப்படையில் அறிவுத்திறன் (ஸ்மார்ட்)  வகுப்பறைகள் துவங்கப்பட உள்ளன*

*இந்த இரு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களை செயல்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது*

*பெரியளவிலான டெண்டர் பணிகளை பாடநூல் கழகம் இதுவரை கையாண்டதில்லை. இதுபோன்ற டெண்டர் பணிகளை அரசின் எல்காட் மூலமே மேற்கொள்ள வேண்டும்*

*குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யும் வகையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல தகுதியான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது*

*எனவே, டெண்டர் அறிவிப்பு அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்ய வேண்டும்*

*இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், அரசுத் தரப்புக்கு அவகாசம் அளித்து மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here