அனைத்து காவலர்களும் இனி தமிழ் மொழியிலேயே கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அண்மையில் காவல் துறை தலைமை இயக்குநரகத்தில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்டம் செயலாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இருக்கையில் பராமரிக்கும் பதிவேடுகள், அனைத்து காவல் அலுவலகங்களின் பெயர் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல் வாகனங்களில் காவல் என தமிழில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.