இந்தியாவில் அரசு ஊழியர்கள் மட்டுமே முழுயாக வரிசெலுத்துகின்றனர். இந்தியர்களின் வரி பாக்கி, 4 பாதுகாப்புத்துறை பட்ஜெட்டிற்கு சமம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் அரசு ஊழியர்கள் மட்டுமே முழுயாக வரிசெலுத்துகின்றனர். இந்தியர்களின் வரி பாக்கி, 4 பாதுகாப்புத்துறை பட்ஜெட்டிற்கு சமம்.






*•_🌿┈•* 
   
  *✍🏻 இந்தியர்களின் வரி பாக்கி, 4 பாதுகாப்புத்துறை பட்ஜெட்டிற்கு சமமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
*
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர்த்து அரசியல்வாதி முதல் வியாபாரிகள் வரை வரிஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


2019 ம் ஆண்டின் செப்., மாத நிலவரப்படி, நேரடி மற்றும் மறைமுக வரி பாக்கி ரூ.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இது 2019-20 ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடியை விட அதிகம்.

கடந்த ஆண்டில் வரி பாக்கி ரூ.14.9 லட்சம் கோடியாக இருந்தது.
நேரடி வரி பாக்கி ரூ.12.2 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி பாக்கி ரூ.6.3 லட்சம் கோடியாகவும், வருமான வரி பாக்கி ரூ.5.9 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி ரூ.2.7 லட்சம் கோடி பாக்கியாக உள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிபரத்தின் படி கடந்த 5 ஆண்டுகளில் 88 சதவீதம் அல்லது ரூ.13.8 லட்சம் கோடி வரிபாக்கி வசூலிக்கப்பட்டுள்ளது
.

 வரி பாக்கி வைத்திருப்போர் மீது ஐகோர்ட்கள் மற்றம் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

2017-18 ம் ஆண்டு நிலவரப்படி நேரடி வரிபாக்கி ரூ.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இவற்றில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளன.

வரிபாக்கிகளை வசூலித்து நாட்டின் நிதி பற்றாக்குறையை
சரி செய்ய பார்லி., நிலைக்குழு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

4 பாதுகாப்பு துறை பட்ஜெட்களை தயாரிக்கும் அளவிற்கு உள்ள இந்தியர்களின் வரிபாக்கி, ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா, உ.பி., ஆகிய 4 பெரிய மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது.




┈┉┅━•• 🌿👨🏻‍💻🌷👩🏻‍💻 🌿••━┅┉┈

Subscribe Here