நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1% முதல் 6.7% வரையில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்ரா ஆய்வு நிறுவனம் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருக்கும். 2016-17ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் இதே வளர்ச்சி காணப்பட்டது. அரசின் மானியச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக மொத்த மதிப்புக் கூட்டு 6.3 சதவிகிதமாக இருக்கும். வேளாண் துறையில் வளர்ச்சி மற்றும் அரசின் செலவினங்கள் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1% முதல் 6.7% வரையில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ஆய்வு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.5 % முதல் 6.7% வரையில் இருக்கும். சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்னைகளால் தொழிற்துறை உற்பத்தி மற்றும் நிதித்துறையில் சிறிது தாக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் வெளியிடப்பட்ட முதற்கட்ட பொருளாதார அறிக்கையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.75 முதல் 7.5 சதவிகிதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக