12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்கத்தினர் இன்று(ஜூன் 15) ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தினக்கூலி பணியாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு, 7 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி அளித்து பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சேப்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்கத்தினர், ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து ஊழியர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் முத்தையா கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூ.1,500 சம்பளத்தை வைத்து எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. தினக் கூலியாக ரூ.300 அளவுக்கு சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக