STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலுவையில் உள்ளனவோ அதே நிலுவையில் (status Que) இருத்தல் வேண்டும்என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவு! 1st stage election societies 09.04.2018 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு,தலைவர்,துணைத்தலைவர் பதவியேற்ற விவர தபால் மற்றும் தீர்மான நகலை இன்று பிற்பகலுக்குள் து.ப.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்..(பதவியேற்றல் மட்டுமே நிகழ்ந்துள்ளது.. எந்த ஆதிகாரமும் வழங்கப்படவில்லை..எனவே புதிய நிர்வாகத்துடன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்) 2nd stage election societies 09.04.2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாககுழுக்கு தேர்வு செய்த தலைவர்,துணைத்தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு நகலை பத்திரமாக வைத்துக்கொ்ளவும்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம். 3rd stage election societies 09.04.2018 வேட்புமனு தாக்கலன்று பெறப்பட்ட வேட்புமனுக்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.. இன்று வேட்புமனு பரிசீலனை பணி செய்ய வேண்டாம்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்... சங்க செயலாளர்கள் தங்கள் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல்பணி நிறுத்தப்பட்ட விவரத்தை தெரிவிக்கவும்... 4th stage election societies வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியோ அல்லது வேறுஎந்த தேர்தல் பணியோ செய்ய வேண்டாம்....மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்...

வயிற்று வலியா? """""”""""""""""""""""""""""""" வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு. வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி? இதோ சிம்பிள் டிரிக்.

*♈♈பாடங்களை புரிந்துபடிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது நடைபெற்றுவரும் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு* சிபிஎஸ்சி கல்விமுறைக்கு சவால் விடும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்துவருகிறது. *நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாள்* நீட் தேர்வை எதிர்கொள்வதில் அச்சம், போட்டி தேர்வுகளில் வெற்றிகளை பறிகொடுக்கும் பரிதாபம் என நீடித்து வந்த மாணவர்களின் சோகத்தை போக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதன்படி தற்போது நடந்து வரும் 10, 11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் இருந்தும் பாடத்தின் பின் பகுதிகளில் இருந்தும் அதிக கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி கேட்கப்பட்டது என்று இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் அறிவித்தபடி, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேட்கப்படுவதுபோல பாடத்தின் உள்பகுதிகளில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. *மாணவர்களுக்கு முழுமதிப்பெண் கிடைக்குமா?* குறிப்பிட்ட கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முழு மதிப்பெண் எடுப்பது இனி கடினமாக இருக்கும். பாடத்தை முழுமையாகவும், புரிந்தும் படித்துள்ள மாணவர்கள் எளிதில் விடையளிக்கின்றனர். அவர்களுக்கு இது புதிய அனுபவமாக இருப்பதாகவும், இதே முறையை அவர்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரத்தில் முழுமதிப்பெண் அதிக மாணவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். நீட் போன்ற தேசிய அளவில் நடக்கக்கூடிய தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு இதுபோன்ற நுண்ணறிவுள்ள வினாத்தாள்கள் அவசியமானது. இனிவரும் அனைத்து தேர்வுகளுக்கு மாணவர்கள் மனப்பாட முறையை மறந்து புரிந்து படிக்கும் நிலைக்கு மாறவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால் எந்த தேர்வாக இருந்தாலும் எளிதாக எதிர்கொள்ளலாம் என்பதே கல்வியாளர்களின் அறிவுரையாக உள்ளது.

ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்கும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்

*🌹பணிநிறைவு பாராட்டு விழா🌹*

Subscribe Here